புகையில்லா போகி கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
நல்லம்பள்ளி அருகே, கெட்டுஹள்ளியில், அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி, மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை தலைமையாசிரியர் ஜீவா துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, கெட்டுஹள்ளி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்புகள் தவிர்ப்பது, புகையில்லா போகியை கொண்டாடுவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்திச் சென்றனர். அத்துடன் அது தொடர்பான கோஷங்களையும் எழுப்பிச் சென்றனர். பேரணியில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி சுற்றுச்சூழல் மன்றம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்