Friday, September 3, 2021

சமூக விழிப்புணர்வு தினம்- 03-09-2021

 தூய்மை நிகழ்வுகள் 2021

சமூக விழிப்புணர்வு தினம்

நாள் : 03-09-2021


    இன்று சமூக விழிப்புணர்வு தினத்தையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், கெட்டுஅள்ளி கிராம மக்களிடையே Covid-19  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கெட்டுஅள்ளி கிராமத்தின் முக்கிய தெருக்களில், கிராம மக்களுக்கு  Covid-19  தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் 
  1. முகக்கவசம் அணிதல்,
  2. சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக்கிக் கொள்ளுதல்,
  3. சமூக இடைவெளி கடைபிடித்தல்
  4. அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவுதல் 
  5. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்  
உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் கிராமத்தின் முக்கியத் தெருக்களில் உள்ள வீடுகளுக்கே சென்று  முகக்கவசம் மற்றும் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நோட்டீஸ் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது. 

    இன்றைய நிகழ்வில் தலைமை ஆசிரியர் திரு.ஜீவா, பட்டதாரி ஆசிரியர்களான லோகநாதன், முருகன், பிரபாவதி, ஐயப்பன் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு,  பொதுமக்களுக்கு Covid-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

வீடியோ & புகைப்படத் தொகுப்பு























Thursday, September 2, 2021

தூய்மை விழிப்புணர்வு தினம்


 தூய்மை நிகழ்வுகள் 2021


நாள்:2  தூய்மை விழிப்புணர்வு தினம்


இடம்   :     அரசு உயர்நிலைப் பள்ளி, கெட்டுஅள்ளி
நாள்    :      02-09-2021

தூய்மை படுத்துதல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல்


”தூய்மை நிகழ்வுகள் 2021” என்ற தலைப்பில் இன்று தூய்மை விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது. பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், நூலகம், ஆய்வகம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.










கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு


    இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சுற்றுப்புறத் தூய்மை, தன்சுத்தம் ஆகியவற்றின் அவசியம் குறித்தும், Covid-19 தொற்றிலிருந்து காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைககள் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் லோகநாதன், ஐயப்பன், அருள்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.










கைகழுவுதல் பற்றி  ஒவ்வொரு படிநிலையாக பட்டதாரி ஆசிரியர முருகன், செயல்முறை விளக்கம் அளித்தார். பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும்  தங்கள் கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்து கொண்டனர்.










Wednesday, September 1, 2021

தூய்மை நிகழ்வுகள் 2021

 தூய்மை நிகழ்வுகள் 2021

தூய்மை உறுதி மொழி தினம்

இடம்       அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளி

நாள்    :     01-09-2021


    தூய்மை உறுதி மொழி தினத்தையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பின்வரும் தூய்மை உறுதிமொழியை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சத்துணவு பணியாளார்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய அனைவரும் இன்று எடுத்துக் கொண்டார்கள்.


நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு