Friday, July 19, 2019

நீர் வள மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கெட்டுஅள்ளி உயர்நிலைப் பள்ளியில் 16.07.2019 அன்று மழைநீர் சேகரிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி  நடைபெற்றது..


கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர் வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்.



இந்து தமிழ் நாளிதழில் -19.07.2019


நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 கருத்தரங்கு மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி அளவில்  சுற்றுச்சூழல் மன்றம்  மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

பறவை பார்த்தல்

திரு.செழியன் ஜா அவர்களின் பதிவு


https://birdsshadow.blogspot.com/2019/01/dharmapuri_3.html

விசையும் இயக்கமும்

எட்டாம் வகுப்பு - அறிவியல் 
வகுப்பறை செயல்பாடுகள்




பங்கேற்பு-கற்றலையும் கற்பித்தலையும் எளிதாக்குகிறது









CCE-அறிவியல் செயல்பாடுகள்

எட்டாம் வகுப்பு - அறிவியல்
 நுண்ணுயிரிகள் பாடத்திற்கான செயல்பாடுகள்
27.06.2019 மற்றும் 28.06.2019

முன் தயாரிப்பு:
வைரஸ்,பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா புரோட்டோசோவா
=>மேற்கண்ட தலைப்புகளில் தலைப்பு அட்டைகளை எழுதிக்கொள்ள வேண்டும்.
=> ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்றவாறு அவற்றின் 
1.செல் வகை (புரோகேரியாட், யூ கேரியாடிக்),
2.வகைகள், 
3.அவற்றைப் பற்றி படிக்கும் பாடப்பிரிவு, பண்புகள்
4.நுண்ணுயிரிகளால் ஏற்படும் நன்மைகள்
5.நுண்ணுயிரிகளால் ஏற்படும் தீமைகள் 6.மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 7.விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவை அடங்கிய சிறு சிறு அடைகளாக எழுதிக்கொள்ள வேண்டும்.

செயல்பாடு:
1.மேற்குறிப்பிட்ட வைரஸ் பாக்டீரியா பூஞ்சை ஆல்கா புரோட்டோசோவா என்ற தலைப்பு அட்டைகளை மேசை மீதோ அல்லது தரையிலோ தனித்தனியாக வைத்து விட வேண்டும்.
2. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5 முதல் 10 அட்டை வீதம் கொடுக்கலாம்.
3. அந்த சிறு குறிப்புகள் உள்ள அட்டைகளை உரிய தலைப்பு அட்டையுடன் சரியாக பொருத்த வேண்டும்.
4. மாணவர்கள் சரியாக பொருத்திய அட்டைகளுக்கு மதிப்பெண் வழங்கலாம்.
5. கூடுதலான வாய்ப்புகளை வழங்கும் பொழுது மீத்திறன் மாணவர்களை அனைத்து அட்டைகளையும் பொருத்த செய்யலாம்.
6. மெல்ல கற்கும் மாணவர்கள் கூடுதலான வாய்ப்புகளைப் பெறும் பொழுது அவர்கள் முன்னர் செய்த தவறை திருத்திக் கொள்ள ஏதுவாகிறது.
குறிப்பு:
இச்செயற்பாட்டை மீத்திறன் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களை இணைத்து குழுச்செயல்பாடாகவும் செய்யலாம்.
🙏🙏✍️
ப. லோகநாதன்
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர் நிலைப்பள்ளி,
கெட்டு அள்ளி
தர்மபுரி மாவட்டம்.










பறவை பார்த்தல் -தமிழகப் பறவைகள்- குறுங்கையேடு வழங்கும் விழா

           கடந்த ஜனவரி மாதம், பறவை பார்த்தல் அறிமுக வகுப்பு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பு ஆகியவை பறவை ஆர்வலர்கள் திரு.செழியன் மற்றும் திரு.மாசிலாமணி செல்வம்  ஆகியோர் சென்னையில் இருந்து  நேரடியாக பள்ளிக்கே வந்திருந்து பயிற்சியளித்தனர். மேலும் தமிழகப் பறவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

                        அதனைத் தொடர்ந்து 04.07.2019 அன்று நடைபெற்ற சுற்றுச் சூழல் தினவிழாவில்  138 தமிழகப் பறவைகள் அடங்கிய குறுங்கையேடு மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.






அறிவினை விரிவு செய்-04.07.2019


     எம்பள்ளி  அறிவியல் மன்றத்தின் சார்பில் 
“அறிவினை விரிவு செய்” என்ற நிகழ்ச்சி  04.07.2019 அன்று நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திரு.சுஷில்குமார் மற்றும் துணைத்தலைவர் திருமதி.ரேணுகாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.






     03.07.2019 அன்று நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக மாணவ மாணவியர்களிடம், அவர்களின், பாடம் சார்ந்த, பாடத்தொடர்பற்ற சந்தேகங்கள், கேட்க நினைத்து தயங்கிய வினாக்கள் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி, அதற்கென பள்ளியின் அறிவிப்பு பலகை அருகில் வைக்கப்பட்டுள்ள வினாப்பெட்டியில் சேர்க்கும் படி அறிவிக்கப்பட்டது.
     மாணவர்களின் வினாக்களுக்கு 04.07.2019 அன்று நடைபெறும் ”அறிவினை விரிவு செய்” நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படும் என்றும், விளக்கம் அளிக்க இயலாத வினாக்களுக்கு, துறை சார் நிபுணர்களைக் நேரடியாக பள்ளிக்கு அழைத்து வந்து  விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

  திரு.சுஷில் குமார் அவர்கள், மாணவர்களின் ஓவ்வொரு வினாவுக்கும், புரியும் படியும், தெளிவாகவும் விளக்கம் அளித்தார். மேலும் தொடர்ந்து  அவருடன்  மாணவர்கள்  ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டும்,    கருத்தாளருடன் உரையாடியும் நிகழ்ச்சியை ஒரு அறிவு வேட்டைக்கான களமாக்கிக் கொண்டனர்.
           
        வகுப்பறை நிகழ்வுகளில் ஈடுபாடில்லாதவர்கள் கூட இந்நிகழ்வில் அதீத ஈடுபாட்டுடன்  கருத்தாளருடன் உரையாடியது, அவர்களது கற்றல் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
  
              








சுற்றுச் சூழல் தின விழா

           ஜூன் 5 உலக சுற்றுச் சூழல்  தினத்தை முன்னிட்டு பள்ளியில் செயல்படும் சுற்றுச் சூழல் மன்றத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

             மேலும் பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்திற்கான மாணவர் சேர்க்கையை தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.



Saturday, March 16, 2019

பத்தாம் வகுப்பு 2018-19 -தேர்வுக்கு தேவையான எழுது பொருட்கள் வழங்கும் விழா

எம் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான எழுது பொருட்கள் (பேனா, பென்சில், இரப்பர், பென்சில் திருகி, பாகைமானி, அளவுகோல்) மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது



தேசிய அறிவியல் தினம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா-28.02.2019

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, கெட்டுஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் தினத்தின் நோக்கம், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து ஆசிரியர் முருகன், அருள்ராஜ் ஆகியோர் பேசினர். 
இதையடுத்து மாணவர்களுக்கு அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
புகைப்படத் தொகுப்பு




















காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி