Friday, July 19, 2019

அறிவினை விரிவு செய்-04.07.2019


     எம்பள்ளி  அறிவியல் மன்றத்தின் சார்பில் 
“அறிவினை விரிவு செய்” என்ற நிகழ்ச்சி  04.07.2019 அன்று நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திரு.சுஷில்குமார் மற்றும் துணைத்தலைவர் திருமதி.ரேணுகாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.






     03.07.2019 அன்று நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக மாணவ மாணவியர்களிடம், அவர்களின், பாடம் சார்ந்த, பாடத்தொடர்பற்ற சந்தேகங்கள், கேட்க நினைத்து தயங்கிய வினாக்கள் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி, அதற்கென பள்ளியின் அறிவிப்பு பலகை அருகில் வைக்கப்பட்டுள்ள வினாப்பெட்டியில் சேர்க்கும் படி அறிவிக்கப்பட்டது.
     மாணவர்களின் வினாக்களுக்கு 04.07.2019 அன்று நடைபெறும் ”அறிவினை விரிவு செய்” நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படும் என்றும், விளக்கம் அளிக்க இயலாத வினாக்களுக்கு, துறை சார் நிபுணர்களைக் நேரடியாக பள்ளிக்கு அழைத்து வந்து  விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

  திரு.சுஷில் குமார் அவர்கள், மாணவர்களின் ஓவ்வொரு வினாவுக்கும், புரியும் படியும், தெளிவாகவும் விளக்கம் அளித்தார். மேலும் தொடர்ந்து  அவருடன்  மாணவர்கள்  ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டும்,    கருத்தாளருடன் உரையாடியும் நிகழ்ச்சியை ஒரு அறிவு வேட்டைக்கான களமாக்கிக் கொண்டனர்.
           
        வகுப்பறை நிகழ்வுகளில் ஈடுபாடில்லாதவர்கள் கூட இந்நிகழ்வில் அதீத ஈடுபாட்டுடன்  கருத்தாளருடன் உரையாடியது, அவர்களது கற்றல் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
  
              








No comments:

Post a Comment