Wednesday, August 29, 2018

வந்தே மாதரம் பாடல்



ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் பிரிவில் நமது நாடு என்ற பாடத்தில் தேசிய சின்னங்களை அறிமுகப்படுத்தும் போது தேசியபாடலான  வந்தேமாதரம் பாடலை பயிற்சி செய்யும் எம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள்.



Tuesday, August 28, 2018

கணித மன்ற தொடக்க விழா

     அரசு உயர்நிலைப்பள்ளி கெட்டுஅள்ளியில் 28-8-2018 அன்று கணித மன்ற தொடக்க விழா நடைபெற்றது இவ்விழாவினை பள்ளி தலைமையாசிரியர் திரு நாம் முருகேசன் அவர்கள் விழா தலைமையேற்று கணிதத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் காலத்தின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். 

     வரவேற்புரை திரு புஷ்பாகரன் பட்டதாரி ஆசிரியர் நன்முறையில்  வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை திரு முருகன் பட்டதாரி ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களிடையே கணிதத்தின் சிறு சிறு வினாக்கள் கேட்டும்,சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஊக்குவித்தார். 

    பட்டதாரி ஆசிரியர்கள் திரு.லோகநாதன், திரு.அருள்ராஜ், திருமதி செல்வி ஆகியோர் வாழ்க்கையோடு ஒன்றியதே கணிதம் என்பதை பல வகைகளில் எடுத்துரைத்தார். 

  மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ஐயப்பன் மற்றும் திருமதி பிரபாவதி ஆகியோர் கணித மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை ,மாணவர்களை தயார் செய்தல், விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கமைப்பு செய்திருந்தனர். 

நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியை திருமதி மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்.
























Monday, August 27, 2018

பிறந்த நாள் வாழ்த்து





25.08.2018 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டடிய ஆறாம் வகுப்பு மாணவி அனுஷா  பள்ளி நூலகத்துக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

மாணவியின் அன்புப்பரிசை பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வி பெற்றுக்கொண்டார்.
பள்ளியின் சார்பில் மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.





Friday, August 24, 2018

10 ஆம் வகுப்பு அறிவியல்--மாதாந்திர தேர்வு ஆகஸ்ட்-2018- தமிழ் வழி




உயிரியல் ஒருமதிப்பெண்  வினாக்கள்



  1. மரபும் பரிணாமமும்
  2. நோய்த் தடைக்காப்பு மண்டலம்
  3. தாவரங்களில் இனப்பெருக்கம்
  4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு



Creative Questions




ஆக்கம்:

ப.லோகநாதன்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
கெட்டுஅள்ளி
தருமபுரி



click here for Question Paper     Answer Key

Tuesday, August 21, 2018

நீங்களும் ஆகலாம் “கலாம்”



அரசு உயர்நிலைப் பள்ளி- கெட்டுஅள்ளி
அறிவியல் மன்றம்

      கெட்டுஅள்ளி பள்ளியின் அறிவியல் மன்றம் சார்பில் நீங்களும் ஆகலாம் “கலாம்” என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கம் 21.08.2018 அன்று நடைபெற்றது.

        இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.அரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில்  பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகம் போற்றும் விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், கண்டுபிடிப்புகளின் கதை உள்ளிட்ட பல செய்திகளை மாணவர்கள் வியக்கும் வண்ணம் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினார்.
             
                   முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பத்தாம் வகுப்பு மாணவர் லோ.நவீன் நன்றியுரை ஆற்றினார்.

 நிகழ்ச்சியை ஒருங்கமைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் திரு.லோகநாதன் செய்திருந்தார்.


வரவேற்புரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.செ.பிரபாவதி
வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.மா.மீனாட்சி
வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.ந.செல்வி
வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.ம.ஐயப்பன்


அறிமுகவுரை: பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன்



தலைமை ஆசிரியர் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தல்

வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.சா.முருகன்

வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.அ.அருள்ராஜ்


தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன்

நினைவு பரிசு வழங்குகிறார், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்  திரு.ப.லோகநாதன்

சிறப்பு விருந்தினர்  திரு.அரசு,  கருத்துரை





லோ.நவீன், நன்றியுரை









Wednesday, August 15, 2018

ஆசிரியர்கள்

தலைமை ஆசிரியர். 
                              திரு நா.முருகேசன்.M.Sc.,M.Ed.,M.Phil

தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள்: 
                              திரு.மு.புஷ்பாகரன்
                              திருமதி. மா.மீனாட்சி

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்:
                              திரு.அ.அருள்ராஜ்

கணித பட்டதாரி ஆசிரியர்கள்:
                               திரு.ம.ஐயப்பன்
                               திருமதி.செ.பிரபாவதி

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்
                               திரு.ப.லோகநாதன்
                               திரு.சா.முருகன்

சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்:
                               திருமதி. ந.செல்வி






சுதந்திர தின விழா- 15.08.2018


அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளியில் சுதந்திர தின விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் விழாவுக்கு தலைமை ஏற்றார். இவ்விழாவில் தொழிலதிபர்கள் திரு.இரத்னவேல் மற்றும் முருகசாமி , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சத்யாபிள்ளை, துணைத்தலைவர் தென்னரசு, பொருளாளர் முனுசாமி மற்றும் PTA நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலதிபர்கள் ரத்னவேல், முருகசாமி, PTA தலைவர் சத்யாபிள்ளை, பொருளாளர் முனுசாமி, பட்டதாரி ஆசிரியர்கள் முருகன்,பிரபாவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அக்னிச் சிறகுகள் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்தவர்கள் பள்ளிக்கு அறிவிப்பு பலகை மற்றும் காந்தியடிகள் புகைப்படத்தை பரிசாக வழங்கினர்.

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோரின் சிறப்பான பணிக்காகவும் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி அளித்ததையொட்டி ,  PTA, SMDC மற்றும் தன்னார்வலர்களால் பாரட்டப்பட்டு கெளரவிக்கப் பட்டனர்.

இவ்விழாவில் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற பல்வேறு சிறப்புப் போட்டிகள் மற்றும் பேச்சு, ஓவியம், கட்டுரை,  வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 10,000 மதிப்புள்ள இப்பரிசுகள் அனைத்தையும் மாணவர்களை ஊக்கபடுத்தும் விதத்தில் மேற்குறிப்பிட்ட தொழிலதிபர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்  லோகநாதன் நன்றியுரை கூறினார். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் வரவேற்பு, விழா ஒருங்கிணைப்பு,  அனைத்தையும் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முருகன் மிகவும் திறம்பட செய்திருந்தார்.