Tuesday, September 2, 2025

சூரிய குடும்பம் - கோள்களின் தொலைவுகள்

*சூரியக்குடும்பம்*

பெரும்பாலும் புத்தகங்களில், இணையத்தில் கிடைக்கும் சூரிய குடும்பத்தின் படங்கள், கோள்கள் அனைத்தும் சூரியனில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்ற சரியான புரிதலை ஏற்படுத்துவது போல் இல்லை. 

இதற்கான சரியான புரிதலை ஏற்படுத்துவதற்காக எனது பள்ளியில் மாணவர்களே புதன் முதல் நெப்டியூன் வரையிலான கோள்களாக பங்கேற்று நடித்து செயல் விளக்கம் கொடுக்கும் வாய்ப்பை தந்தார்கள்..

1 வானியல் அலகு= 1 மீ என எடுத்துக்கொண்டு (இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு ) சூரியனிலிருந்து பூமி எவ்வளவு தொலைவில் உள்ளதோ அத்த தொலைவை போல மற்ற கோள்கள் எத்தனை மடங்கு உள்ளது (மீட்டரில்) என்பதை கணக்கிட்டு அட்டவணையாக கொடுத்தேன். 

இச்செயல்பாடை நடத்திக் காட்டுவதற்காக அறிவியல் மன்ற மாணவர்கள் தாங்களாகவே முன்வந்தார்கள்.  

ஒரு மீட்டர் நீளமுள்ள குச்சியுடன் வந்து அவர்கள் என்னிடமிருந்து அந்த அட்டவணையை பெற்றுக் கொண்டார்கள். ஒரு பக்கெட்டை கவிழ்த்து அதைச் சுற்றி வட்டமிட்டு பின்பு அதில் M.sand நிரப்பி *"சார் இதுதான் சூரியன்"* என்றார்கள். 

பின்  அட்டவணையை ஒப்பிட்டு சூரியனிலிருந்து ஒவ்வொரு கோள் இருக்கும் (1AU=1 மீ) தொலைவினையும் M.sand கொண்டு கோடிட்டு காட்டினார்கள்.

அனைத்து கோள்களின் கோள்களின் தொலைவையும் குறிப்பிட்ட பின்னர், அந்தக் கோடுகள் எந்த கோள்களை குறிப்பிடுகின்றன என்பதை அறிவதற்காக கோட்டின் அருகிலேயே கோள்களின் பெயர்களை எழுதினார்கள்.

(இதற்கும் M.Sand தான். பள்ளியில் எந்த பொருள் எளிதாக கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டே வானை அளந்தோம்)

ஆர்வமான மாணவர்கள் அந்தந்த இடங்களில் ஒவ்வொரு  கோள்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட தாள்களை எடுத்துக்கொண்டு நின்றார்கள்.

மற்ற மாணவர்கள் அனைவரும் கோள்கள் ஒவ்வொன்றும் உண்மையில் இவ்வளவு இடைவெளியில் உள்ளனவா என்பதை புரிந்து கொண்டனர். 

"அடேங்கப்பா, என்ன சார் நெப்டியூன்ல்லாம் இவ்வளவு தூரமா இருக்குது?" என்று ஆச்சரியமடைந்தனர்.

(சூரியனின் மையத்துக்கும் பூமியின் மையத்திற்கும் இடையே உள்ள சராசரி தொலைவு ஒரு வானியல் அலகு எனப்படுகிறது. இது 149,597,870.7 கிலோமீட்டருக்கு சமம். இதை பன்னாட்டு அளவு முறையில்  *1AU=1.496X10^11 மீ* என குறிப்பிடுவார்கள்.)

இச்செயல்பாடு எதிர்வரும் *செப்டம்பர் 7, 8 தேதிகளில் நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம்* குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆர்வமூட்டும் செயல்பாடாக நடந்தது. 

Tuesday, July 29, 2025

இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் புலிகள் பாதுகாப்பு தினம்

பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் இயற்கை பாதுகாப்பு தினம் (ஜூலை 28) புலிகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி(ஜூலை 29) பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
சோலைக் காடுகளை காப்போம் புலிகளைக் காப்போம் ஆகிய ஆவணத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 
காடுகளின் முக்கியத்துவம், காடுகள் எவ்வாறு  மழை நீரை சேமிக்கின்றன, மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளால் பல்லுயிரினத்தன்மை எவ்வாறு பேணிக் காக்கப்படுகின்றன, காடழிப்பினால் காட்டுயிர் மனித மோதல் எவ்வாறு உருவாகிறது? புலிகள் மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சட்டங்கள் என்னென்ன புலிகளை பாதுகாக்க காடுகளை பாதுகாக்க மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


மற்றொரு நிகழ்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு புலிகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஜெய்ஹிந்த், மௌனிஷ், தாமரைச்செல்வன் என்ற மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து வேணி ஸ்ரீ , கேசவர்த்தினி, மாலினி ஆகிய மாணவிகளும் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார்.

வினாடி வினா நிகழ்ச்சி

பள்ளியின் வினாடி வினா மன்றம் சார்பில் 29-07-2025 நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். 
குறிஞ்சி குழுவினர் 
வேதா 
சக்திவேல் 
பாரி 
அருள்குமார்
ஹேமவர்ஷினி 
முல்லை குழுவினர் 
1. மாலனி
2. சிவா 
3. சூரிய பிரகாஷ் 
4. த்ரிஷாந்த் 
5. இளம் சுருளி
மருதம் குழுவினர் 
1. பிரகாஷ் 
2. நிவேதா 
3. ஞானசேகர் 
4. அபிதா 
5. தேவகி 

நெய்தல் குழுவினர் 
1. விவேகன் 
2. ரினித் 
3. குமரவேல் 
4. விஜயலட்சுமி 
5. ஸ்ரீதரன் 
பாலை குழுவினர்
1. ஜீவிதா 
2. அபிநயா 
3. சாய் பிரதீப் 
4. முனிராஜ் 
5. சுபேசன்

Quiz master

திருமதி ந. செல்வி 
பட்டதாரி ஆசிரியை 

Scorer

திரு ம ஐயப்பன் 
பட்டதாரி ஆசிரியர் 

மொத்தம் ஆறு சுற்றுகள் நடைபெற்றது. 

வெற்றி பெற்ற அணியினர்

குறிஞ்சி



Tuesday, July 22, 2025

வானவில் மன்றம் சார்பில் பை - தோராய மதிப்பீட்டு தினம்

வானவில் மன்றம்  சார்பில் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 

பை-தோராய மதிப்பீட்டு தின நிகழ்ச்சி


 22-07-2025 அன்று பை-தோராய மதிப்பீட்டு நாள் அனுசரிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களின் பாடம் தாண்டிய திறமைகளை வளர்க்கும் விதமாக பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்விதமாக மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதத் திறமைகளையும்  படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக (22-07-2025) இன்று பை-தோராய மதிப்பீட்டு தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  ஏழு மேசைகள் கொண்டு விட்டமும் அதைச் சுற்றி 22 மேசைகளால் வட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வட்டத்தின் சுற்றளவுக்கும், விட்டத்திற்கும் உள்ள தகவு 22/7 என்பதை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொண்டனர்.  மாணவர்கள் வட்டம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ”கிணறுகள் ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன?” ”தோசைகள் ஏன் வட்டவடிவில் சுடப்படுகின்றன?”  போன்ற சிந்தனையைத் தூண்டும் கேள்விகளாக  கேட்டனர்.    மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியர்கள் லோகநாதன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்து எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் சுகந்தி உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



Friday, July 11, 2025

மகிழ்முற்றம் - அணித்தலைவர்கள் பதவியேற்பு | 11-07-2025

மாணவ அணித்தலைவர்கள் பதவியேற்பு 


         6-10 வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழரின் ஐவகை நிலங்களின் அடிப்படையில் ஐவகை அணிகளாக கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) என்ற  இணையத்தின் வாயிலாக பிரிக்கப்பட்டனர். 

    இந்த அணிகளில் உள்ள உறுப்பினர்கள் இணைந்து தங்களது அணித்தலைவர்களைத்(House Captains) தேர்ந்தெடுத்தனர். மேலும் தலைமை ஆசிரியர் இந்த அணிகளுக்கு தலா ஒரு பொறுப்பாசிரியரை நியமித்தார்.   தேர்ந்தெடுக்கப்பட்ட அணித் தலைவர்களின் பதவியேற்பு விழாவானது பொறுப்பாசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது.

குறிஞ்சி:

பொறுப்பாசிரியர்    :    திரு. அ. அருள்ராஜ்

அணித்தலைவர்        :    ஷாரா வ


முல்லை:

பொறுப்பாசிரியர்    :     திரு. ம. ஐயப்பன்
அணித்தலைவர்        :     ரெபேகா. ப

மருதம்:

பொறுப்பாசிரியர்    :     திரு. ப. லோகநாதன்
அணித்தலைவர்        :     சிந்து வ





நெய்தல்:

பொறுப்பாசிரியர்    :     திருமதி. மா. மீனாட்சி
அணித்தலைவர்        :     ரிஷிகேஷ் மா






பாலை:

பொறுப்பாசிரியர்    :     திருமதி. ந.செல்வி
அணித்தலைவர்        :     தர்ஷன். மா



















Monday, July 7, 2025

Standards Club - National Level Quiz - 28-06-2025

தேசிய அளவில் இணையவழியில் நடைபெற்ற வினாடி வினாப்போட்டியில் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் Standards Club  மாணவர்கள் பங்கேற்றனர். இவ்வினாடி வினா போட்டியானது பந்துமுனை பேனா, கால்பந்து என்னும் தலைப்புகளில் நடைபெற்றது.






Standard Club | Poster Making Competition | 05-07-2025

 இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில்
கெட்டுஅள்ளி பள்ளியில் விளம்பர பதாகை தயாரிப்பு போட்டி


நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  செயல்பட்டு வரும் தரநிர்ணய மன்றத்தின் மூலம் ( Standard Club) மாணவர்களுக்கு 04-07-2025 அன்று விளம்பர பதாகை தயாரிப்புப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இந்திய தர நிர்ணய அமைவன கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின்  அலுவலர் சரவணகுமார் தொடங்கி  வைத்தார். பள்ளித் தலைமை  ஆசிரியர் சுகந்தி தலைமை தாங்கினார்.  

பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் அடுப்பு, குக்கர், மின்விசிறி, தலைக்கவசம், உலர் மின்கலன்கள், எரிவாயு உருளை, மிதிவண்டி, பால்பாயிண்ட் பேனா உள்ளிட்ட பொருட்களுக்கான ஐ.எஸ்.ஐ தரம், தங்க நகைகளுக்கு வழங்கப்படும் HUID, மின்னணுப் பொருட்களுக்கு வழங்கப்படும் R- எண் குறித்த விழிப்புணர்வு  பள்ளிப்பருவத்திலேயே ஏற்படும் போது அவர்கள் வருங்காலத்தில் சிறந்த நுகர்வோராகவும், தொடர்புடைய பல்வெறு துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வமூட்டும் விதமாகவும் இப்போட்டியானது வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நொய்டாவில் உள்ள தேசிய தரநிர்ணய  பயிற்சி மையத்தில் (NITS, Noida) பயிற்சி பெற்ற இப்பள்ளியின் ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார். போட்டியின் வெற்றியாளார்களை பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் தெரிவு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் மூலம் பரிசுகள் வழங்கப்படுகிறது.