Showing posts with label சுற்றுச் சூழல் மன்றம். Show all posts
Showing posts with label சுற்றுச் சூழல் மன்றம். Show all posts

Monday, July 7, 2025

உலகச் சுற்றுச் சூழல் தினவிழா | ஜூன் 2025

     உலகச் சுற்றுச் சூழல் தினவிழாவையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  கீழ்க்கண்ட  நிகழ்ச்சிகள் 05-06-2025 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் லோகநாதன் ஒருங்கிணைத்தார்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்: 

  • மரக்கன்றுகள் நடுதல், 
  • தமிழகப் பறவைகள் புகைப்படக் கண்காட்சி, 
  • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, 
  • பசுமை உறுதி மொழி ஏற்பு 

















புகைப்படத் தொகுப்பு:


Friday, July 19, 2019

நீர் வள மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கெட்டுஅள்ளி உயர்நிலைப் பள்ளியில் 16.07.2019 அன்று மழைநீர் சேகரிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி  நடைபெற்றது..


கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர் வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்.



இந்து தமிழ் நாளிதழில் -19.07.2019


நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 கருத்தரங்கு மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி அளவில்  சுற்றுச்சூழல் மன்றம்  மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

பறவை பார்த்தல் -தமிழகப் பறவைகள்- குறுங்கையேடு வழங்கும் விழா

           கடந்த ஜனவரி மாதம், பறவை பார்த்தல் அறிமுக வகுப்பு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பு ஆகியவை பறவை ஆர்வலர்கள் திரு.செழியன் மற்றும் திரு.மாசிலாமணி செல்வம்  ஆகியோர் சென்னையில் இருந்து  நேரடியாக பள்ளிக்கே வந்திருந்து பயிற்சியளித்தனர். மேலும் தமிழகப் பறவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

                        அதனைத் தொடர்ந்து 04.07.2019 அன்று நடைபெற்ற சுற்றுச் சூழல் தினவிழாவில்  138 தமிழகப் பறவைகள் அடங்கிய குறுங்கையேடு மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.






Saturday, March 16, 2019

பறவை பார்த்தல்

பறவை பார்த்தல் நிகழ்ச்சி குறித்த் திரு.செழியன் அவர்களின் பதிவு



பதிவை வாசிக்க


காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி

Friday, February 15, 2019

பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம்

இன்று 15.02.2019 தருமபுரி மாவட்டம், கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தொடங்கி வைத்தார். சுமார் 100க்கும் அதிகமான தமிழ்நாட்டு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிதிருந்தது.

பறவைபார்த்தல் -அறிமுக கருத்தரங்கில் பறவை ஆர்வலர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.செழியன்.ஜா மற்றும்
பறவை ஆர்வலர்,சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.மாசிலாமணி செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பறவைகளை பார்த்தல், பறவைகளை அடையாளம் காணல், அதனை இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து விவரித்ததோடு, மாணவர்களை  பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச்சென்று சுமார் நீலவால் பஞ்சுருட்டான், புதர்ச்சிட்டு, வல்லூறு, பனை உழவாரன், குண்டுகரிச்சான், பனங்காடை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பறவையினங்களை அடையாளம் காட்டி பறவை பார்த்தல் குறித்த நுட்பங்களை விளக்கினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ப.லோகநாதன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் தமிழகப் பறவைகள் குறித்த கையேடு
















வழங்கப்பட்டது.