Friday, November 26, 2021

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 27-11-2021 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர்  மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tuesday, November 23, 2021

கண்ணொளி காப்போம் திட்டம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (24.11.2021) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ்  கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண்மருத்துவர் திரு.கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு கண் கண்ணாடியை அணியும் முறை, பாதுகாப்பாக பராமரித்தல் மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் இப்பள்ளியில் பயிலும் 21 மாணவ மாணவியருக்கு  கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இறுதியாக பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்வில்  பட்டதாரி ஆசிரியர்கள் ஐயப்பன் அருள்ராஜ், பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.