வானவில் மன்றம் சார்பில் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்
பை-தோராய மதிப்பீட்டு தின நிகழ்ச்சி
22-07-2025 அன்று பை-தோராய மதிப்பீட்டு நாள் அனுசரிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களின் பாடம் தாண்டிய திறமைகளை வளர்க்கும் விதமாக பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்விதமாக மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதத் திறமைகளையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக (22-07-2025) இன்று பை-தோராய மதிப்பீட்டு தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏழு மேசைகள் கொண்டு விட்டமும் அதைச் சுற்றி 22 மேசைகளால் வட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வட்டத்தின் சுற்றளவுக்கும், விட்டத்திற்கும் உள்ள தகவு 22/7 என்பதை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொண்டனர். மாணவர்கள் வட்டம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ”கிணறுகள் ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன?” ”தோசைகள் ஏன் வட்டவடிவில் சுடப்படுகின்றன?” போன்ற சிந்தனையைத் தூண்டும் கேள்விகளாக கேட்டனர். மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியர்கள் லோகநாதன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்து எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் சுகந்தி உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment