அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளியில் சுதந்திர தின விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் விழாவுக்கு தலைமை ஏற்றார். இவ்விழாவில் தொழிலதிபர்கள் திரு.இரத்னவேல் மற்றும் முருகசாமி , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சத்யாபிள்ளை, துணைத்தலைவர் தென்னரசு, பொருளாளர் முனுசாமி மற்றும் PTA நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர்கள் ரத்னவேல், முருகசாமி, PTA தலைவர் சத்யாபிள்ளை, பொருளாளர் முனுசாமி, பட்டதாரி ஆசிரியர்கள் முருகன்,பிரபாவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
அக்னிச் சிறகுகள் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்தவர்கள் பள்ளிக்கு அறிவிப்பு பலகை மற்றும் காந்தியடிகள் புகைப்படத்தை பரிசாக வழங்கினர்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோரின் சிறப்பான பணிக்காகவும் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி அளித்ததையொட்டி , PTA, SMDC மற்றும் தன்னார்வலர்களால் பாரட்டப்பட்டு கெளரவிக்கப் பட்டனர்.
இவ்விழாவில் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற பல்வேறு சிறப்புப் போட்டிகள் மற்றும் பேச்சு, ஓவியம், கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 10,000 மதிப்புள்ள இப்பரிசுகள் அனைத்தையும் மாணவர்களை ஊக்கபடுத்தும் விதத்தில் மேற்குறிப்பிட்ட தொழிலதிபர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் வரவேற்பு, விழா ஒருங்கிணைப்பு, அனைத்தையும் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முருகன் மிகவும் திறம்பட செய்திருந்தார்.































No comments:
Post a Comment