அரசு உயர்நிலைப் பள்ளி- கெட்டுஅள்ளி
அறிவியல் மன்றம்
கெட்டுஅள்ளி பள்ளியின் அறிவியல் மன்றம் சார்பில் நீங்களும் ஆகலாம் “கலாம்” என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கம் 21.08.2018 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.அரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகம் போற்றும் விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், கண்டுபிடிப்புகளின் கதை உள்ளிட்ட பல செய்திகளை மாணவர்கள் வியக்கும் வண்ணம் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பத்தாம் வகுப்பு மாணவர் லோ.நவீன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை ஒருங்கமைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் திரு.லோகநாதன் செய்திருந்தார்.
 |
| வரவேற்புரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.செ.பிரபாவதி |
 |
| வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.மா.மீனாட்சி |
 |
| வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திருமதி.ந.செல்வி |
 |
| வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.ம.ஐயப்பன் |
 |
| அறிமுகவுரை: பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன் |
 |
| தலைமை ஆசிரியர் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தல் |
 |
| வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.சா.முருகன் |
 |
வாழ்த்துரை: பட்டதாரி ஆசிரியர் திரு.அ.அருள்ராஜ்
|
 |
| தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் |
 |
| நினைவு பரிசு வழங்குகிறார், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.ப.லோகநாதன் |
 |
| சிறப்பு விருந்தினர் திரு.அரசு, கருத்துரை |
 |
| லோ.நவீன், நன்றியுரை |
No comments:
Post a Comment