தூய்மை நிகழ்வுகள் 2021
நாள்:2 தூய்மை விழிப்புணர்வு தினம்
இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, கெட்டுஅள்ளி
நாள் : 02-09-2021
தூய்மை படுத்துதல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல்
”தூய்மை நிகழ்வுகள் 2021” என்ற தலைப்பில் இன்று தூய்மை விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது. பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், நூலகம், ஆய்வகம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு
இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சுற்றுப்புறத் தூய்மை, தன்சுத்தம் ஆகியவற்றின் அவசியம் குறித்தும், Covid-19 தொற்றிலிருந்து காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைககள் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் லோகநாதன், ஐயப்பன், அருள்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
கைகழுவுதல் பற்றி ஒவ்வொரு படிநிலையாக பட்டதாரி ஆசிரியர முருகன், செயல்முறை விளக்கம் அளித்தார். பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்து கொண்டனர்.





No comments:
Post a Comment